பெண்ணிடம் கத்திமுனையில் இரண்டு பவுன் நகை பறிப்பு
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே ஸ்ரீ பெரம்புதூரில் வயலுக்கு நடந்து சென்ற பெண்ணிடம் அடையாளம் தெரியாத மூன்று மர்ம நபர்கள் கத்தி முனையில் இரண்டு பவுன் நகை ஒரு ஜோடி வெள்ளி அங்கிலெட்டை பறித்துச் சென்றனர்.
மண்ணச்சநல்லூர் அருகே ஸ்ரீ பெரம்பதூர் வடக்கு கவுண்டர் தெருவை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி பரமேஸ்வரி(39) இவர் நேற்று மாலை 4 மணி அளவில் ஸ்ரீபெரம்புதூர் பகுதியில் உள்ள வயலுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாதா மூன்று மர்ம நபர்கள் கத்தி முனையில் இரண்டு பவுன் நகை மற்றும் ஒரு ஜோடி வெள்ளி அங்கிலேட்டை பறித்து சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் சிறுகனூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.புகாரின் பேரில் சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.