மாநகராட்சியே தண்ணீரில் மூழ்கும்போது ஊராட்சி என்ன செய்யும்? – நாச்சிக்குறிச்சி பஞ்சாயத்தில் நடப்பது என்ன?

0 746
Stalin trichy visit

திருச்சி மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் ஸ்மார்ட்சிட்டி பணிகள் நடைபெற்று வருகிறது. அது ஒருபுறமிருக்க, தற்போது மழைக்காலம் என்பதால் ஆங்காங்கே குண்டும் குழிகளில் பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இந்தநிலையில் “எங்கள் பகுதியில் தண்ணீர் சூழ்ந்துள்ளது, வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது” என மாநகராட்சி மீது பொதுமக்கள் ஒருபுறம் குறைகூறிக் கொண்டே வருகின்றனர்.

திருச்சியின் ஆரம்ப காலகட்டங்களில் சுற்றிலும் வயல்வெளியாக, குளங்களாக இருந்த பல பகுதிகள் இன்று வீட்டுமனைகளாகவும், வீடுகளாகவும் மாறியுள்ளது. இதுதான் தண்ணீர் தேங்குவதற்கான முக்கியமான காரணமாக உள்ளதாக சமூக ஆர்வலர்கள் பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

இதற்கு நாச்சிக்குறிச்சி பஞ்சாயத்து மட்டும் விதிவிலக்கல்ல… மாநகராட்சியின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி வரும் நிலையில் திருச்சி மாநகராட்சிக்கு மிக அருகாமையில் உள்ள பஞ்சாயத்தாக இருப்பது நாச்சிக்குறிச்சி பஞ்சாயத்து!

இப்பகுதியில் பொதுமக்கள் மற்றும் பலர் வீடுகளில் தண்ணீர் தேங்குவதாகவும், சாக்கடை வழிந்தோடுவதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்தனர். இதுகுறித்து திருச்சி மெயில் இணையதளம் நேரடியாக கள விசிட் செய்தோம்.

அப்போதுதான் உண்மை நிலை தெரிந்தது… அங்குள்ள பொதுமக்கள் ஒத்துழைக்காமல் வடிகால் செல்லும் அனைத்திலும் குப்பைகளை கொட்டி மூடி உள்ளனர். இதுமட்டுமல்லாமல் வடிகால் நீர் செல்லும் அனைத்து வழித்தடங்களும் முழுமையாக மூடப்பட்டுள்ளது. ஊராட்சி நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையிலும் பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாததால் இந்த மழைக்காலங்களில் மழைநீர் தேங்கும் நிலை உருவாகியுள்ளது.

நாச்சிக்குறிச்சி பஞ்சாயத்துக்குட்பட்ட தீரன் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக அனைத்தும் வயல்வெளிகளாக இருந்த பகுதி! குறிப்பாக அதனை சுற்றியுள்ள பல பகுதிகளில் இன்று வீட்டுகளாக, வீட்டுமனைகளாக மாற்றி வருகின்றனர். “தனியார் இடங்களில் வீடு வாங்கி மழை நீர் புகுந்துள்ளது கழிவு நீர் புகுந்துள்ளது” என்றால் அதற்கு ஊராட்சி காரணமாக முடியுமா? என்ற ஒரு கேள்வி முன் வைக்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்…

மேலும் ஊராட்சி மன்ற நிர்வாகம் சார்பாக மழை காலங்களுக்கு முன்பாகவே கிட்டத்தட்ட ஒரு 20 நாட்களுக்கு முன் நாச்சிக்குறிச்சி பஞ்சாயத்து வழியாக செல்லும் உய்யக்கொண்டான் கால்வாய் மற்றும் ஊருக்குள் செல்லும் மழை நீர் வடிகால் என அனைத்தையும் தூர்வாரி உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பெய்த மழை காரணமாக அப்பகுதியில் மழை நீர் சூழ்ந்து உள்ளதாக புகாரையடுத்து அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஆய்வுப்பணிகள் செய்வதாக தெரியவருகிறது….

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய https://chat.whatsapp.com/ElwJ6Sxx3w58HlHTxk97fo

Leave A Reply

Your email address will not be published.