விவசாயிகளுக்கு மானியத்தில் உரங்கள் : அமைச்சர்கள் வழங்கினார்
திருச்சி, ஜூலை 8 திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் குறுவை சாகுபடி சிறப்புத் தொகுப்பு திட்டத்தின் கீழ் 100 சதவீத மானியத்தில் உரங்களை விவசாய பெருமக்களுக்கு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மேயர் அன்பழகன், ஆணையர் வைத்திநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள், சவுந்தரபாண்டியன் (லால்குடி), அப்துல்சமது(மணப்பாறை), மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி, மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.