சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலில் உலக நன்மைக்காக சுதர்சன ஹோமம்
திருச்சி, ஆக.24 திருச்சி தலைமை தபால் நிலையம் அருகில் உள்ள பிரசித்தி பெற்ற சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று காலை ஆவணி மாத மூல நட்சத்திர பூஜையும், உலக நன்மைக்காக வேண்டி சுதர்சன ஹோமமும் நடந்தது. ஹோமத்தை தொடர்ந்து மூலவர் சஞ்சீவி ஆஞ்சநேய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், பூஜைகளும் நடந்தன. பின்னர் மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அர்ச்சகர் சுரேஷ் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.