திருச்சியில் கோடை மழை: வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல்

0 15
Stalin trichy visit

திருச்சி, மே 8  திருச்சியில் கோடை மழை: வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல்

திருச்சி மாநகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், இன்று மதியத்திற்கு மேல் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்தத் திடீர் மழையால் நகரின் வெப்பநிலை குறைந்து இதமான சூழல் நிலவுகிறது.

இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், மதியத்திற்கு மேல் மாநகரின் முக்கிய பகுதிகளான மத்திய பேருந்து நிலையம், தில்லை நகர், ஸ்ரீரங்கம், திருவெறும்பூர் மற்றும் ஜங்ஷன் பகுதிகளில் மிதமான முதல் கனமழை பெய்தது.

திடீர் மழையினால் சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் சற்று சிரமத்திற்கு உள்ளாகினர். இருப்பினும், நீண்ட நாட்களாக நிலவி வந்த கடும் வெப்பத்திலிருந்து இந்த மழை நிம்மதியளித்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.