துப்பாக்கி சுடும் பயிற்சிக்கான கோடைக்கால சிறப்பு முகாம் பரிசளிப்பு விழா

0 376
Stalin trichy visit

திருச்சி மாநகா கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள மாநகர ரைபில் கிளப்பை -கடந்த 31.12.2021-ந்தேதி தொடங்கப்பட்டது. மாவட்ட, தேசிய மற்றும் சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டிக்கு கலந்து கொள்ள பயிற்சி பெறும் வகையில் திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.

திருச்சி மாநகர ரைபில் கிளப்பில் மொத்தம் 215 நிரந்தர உறுப்பினர்கள் மற்றும் மாணவர்களும் உள்ளனர். மேற்படி ரைபிள் கிளப்பில் 50 மீட்டர் தூரத்தில் ஒரு சுடுதளமும், 25 மீட்டர் தூரத்தில் ஒரு சுடுதளமும், 10 மீட்டர் தூரத்தில் மூன்று சுடுதளம் மற்றும் உடற்பயிற்சி கூடம் ஒன்று உள்ளது.  இக்கிளப்பில் துப்பாக்கி கடும் பயிற்சி பெற ஆர்வமுள்ள மாணவ, மாணவிகளுக்கு Air Rifle பயிற்சிக்கான கோடை கால சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இக்கோடை கால முகாமில் 12 வயது முதல் 17 வயது வரையிலான பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம். இப்பயிற்சிக்கான முதல் பேட்ச் 01.05.2022 முதல் 15.05.2022 வரை நடைபெற்றது.

முதல் பேட்சில் 10 மீட்டர் Air Rifle போட்டியில் மொத்தம் 22 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டார்கள், அதில் V.சுபர்ணா, A.S.யோகேஷ்வரன், K.கணபத்தர்ஷனா ஆகியோர் வெற்றி பெற்றார்கள். மேலும் இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு திருச்சி மாநகர காவல் ஆணையர்  கார்த்திகேயன், இ.கா.ப,  இன்று 15.05.22ந்தேதி பரிசுகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் பரிசளிப்பு நிகழ்ச்சியில் திருச்சி மாநகர ரையில் கிளப்பில் செயலாளர் செந்தூர்செல்வள்  கலந்து கொண்டார். மேலும் இரண்டாவது பேட்ச் 15.05.2022 முதல் 31.05.2022 வரையிலும் நடைபெறுகிறது.

திருச்சி மாநகரில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகள் இக்கோடை கால முகாமை பயன்படுத்தி துப்பாக்கி சுடுவதில் தங்களது திறனை வார்த்து நிபணத்துவத்தை பெற திருச்சி மாதகர் காயல் ஆணையர் திரு G.கார்த்திகேயன், இ.கா.ப,  அறிவுறுத்தியுள்ளார்.  இம்முகாம் தொடர்பான பதிவு மற்றும் அனைத்து தகவல்களுக்கு திருச்சி ரைபிள் கிளப் தொலைப்பேசி எண்   98433-70804 என்ற எண்ணிற்கு தொடர்புக்கொள்ளுமாறும், இம்முகாமிற்கு குறைவான இடங்களேவில் முதலில் பதிவு செய்பவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.