வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தென்னை கன்றுகள் வழங்கல்
திருவாசியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தென்னை கன்றுகள் வழங்கினர்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருவாசி ஊராட்சியில் இன்று மண்ணச்சநல்லூர் வேளாண் உழவர் நலத்துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஒரு பண்ணை குடும்பத்திற்கு (2) இரண்டு தென்னை கன்றுகள் வீதம் ஊராட்சி மன்ற தலைவர் பானு முருகேசன் தலைமையில் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட வேலை வாய்ப்பு ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் அருண்மொழி, மண்ணச்சநல்லூர் கிராம ஊராட்சிகளின் வட்டார வளர்ச்சி அலுவலர் ரேவதி, திருவாசி ஊராட்சி செயலர் காமாட்சி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வேளாண்மை உதவி அலுவலர் பார்த்திபன் செய்திருந்தார்.