சாமவேதீஸ்வரர் கோயிலில் சுவாமி திரு வீதி உலா

0 332
Stalin trichy visit

 

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே திருமங்கலம் கிராமத்தில் எழுந்தருளிருக்கும் அருள்மிகு ஸ்ரீ லோகநாயகி அம்பிகா சமேத சாமவேதீஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு சுவாமி திரு வீதி உலா நடைபெற்றது.

திருமங்கலத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ லோகநாயகி அம்பிகா சமேத சாமவேதீஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு உலக நன்மைக்காகவும்,பொதுமக்கள் அனைவரும் எல்லா வளங்களும் பெற்று வளமுடன் மன அமைதியாக வாழ வேண்டியும்
அருள்மிகு வள்ளி தேவசேனா சமேத கல்யாணசுப்பிரமணிய சுவாமிக்கு கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தை முன்னிட்டு காலையில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இரவு சுவாமி கேடயத்தில் புறப்பாடாகி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் பக்தர்கள் அனைவருக்கும் முருகப்பெருமான் அனுக்கிரகம் கிடைக்க பிரார்த்தனை செய்து கொண்டனர்.
இந்த விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் கார்த்திகை செல்வி உபயதாரர் அருணகிரி ஆலய அர்ச்சகர்கள் பாலசுப்பிரமணிய குருக்கள்,செந்தில்நாத சிவம் மற்றும் கோயில் பணியாளர்கள் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.