திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே திருவெள்ளறை கடைவீதி பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவருடைய மனைவி 45 வயதான சுமதி. இவர் கடந்த 19ம் தேதி இரவு 10 மணி அளவில் தனது வீட்டின் முன்பு நின்று உறவினரிடம் செல்போனில்
பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் அவர் கழுத்தில் கிடந்த 41/2 பவுன் தங்க தாலி செயினை பறித்து சென்றனர். இதுகுறித்து மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தாலி செயினை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.