தமிழ்நாடு அனைத்து தொழிலாளர் நல கூட்டமைப்பின் ஆன்லைன் வர்த்தக இணையதளம் அறிமுக விழா
திருச்சி ஆக 2 -தமிழ்நாடு அனைத்து தொழிலாளர் நல கூட்டமைப்பின்
திருச்சி ஒருங்கிணைந்த மண்டல நிர்வாகிகள் கூட்டம் மற்றும் ஆப்பி-பை ஆன்லைன் வர்த்தக இணையதளம் அறிமுக விழா திருச்சியில் நடைபெற்றது.
இதில் திருச்சி அரியலூர் பெரம்பலூர் புதுக்கோட்டை கரூர் தேனி திண்டுக்கல் என 7மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்ற திருச்சி மண்டல கூட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் வின்சென்ட் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். மாநில அமைப்பு செயலாளர் ஈஸ்வரி (பழநி) வரவேற்று பேசினார். மாநில அமைப்பு செயலாளர் பேராசிரியர் குமரேசன், தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முகம்மது சீதக்காதர், திருச்சி மாவட்ட தலைவர் கௌசல்யா, திருச்சி மாவட்ட செயலாளர்கள் யோகேஸ்வரன் ஆனந்தி, திருச்சி மாவட்ட அமைப்பு செயலாளர் சசிகலா மற்றும் தஞ்சை,நாகை இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்கள் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்தும் நிர்வாகிகள் செயல்பாடு குறித்தும் தமிழ்நாடு அனைத்து தொழிலாளர் நல கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் கே வி திருப்பதி சிறப்புரை ஆற்றினார்.
முன்னதாக அமைப்புசாரா தொழிலாளர்களின் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்ய ஆப்பி-பை என்ற புதிய வர்த்தக இணையதளத்தை அறிமுகம் செய்து அதற்கான பயிற்சி குறித்து காரைக்கால் பாலா கருத்துரை வழங்கினார். முடிவில் திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.