பால் உற்பத்தி பணத்துடன் ஊக்கத் தொகையை சேர்த்து வழங்க த.மா.கா. விவசாய பிரிவு கோரிக்கை

0 179
Stalin trichy visit

திருச்சி ஆக 2  தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜயை திருச்சி மாநகர், மாவட்ட த.மா.கா. விவசாய பிரிவு மாவட்டத் தலைவர் புங்கனூர் செல்வம் மற்றும் மாநில நிர்வாகி வயலூர் ராஜேந்திரன் ஆகியோர் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் வேளாண்மை உற்பத்தியை அடுத்து முக்கிய உணவு உற்பத்தி பால் உற்பத்தியாகும். அரசுக்கு பால் உற்பத்தி செய்து வழங்கும் விவசாயிகள் மிகவும் ஏழ்மை நிலையில் குடும்ப வருவாய்க்கான உண்டான செலவினத்துக்கு கால் நடை வளர்க்கின்றனர். தமிழ் நாட்டில் 20 லட்சம் பேர் ஆவின் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ளனர். 8 லட்சம் விவசாயிகள் தினமும் ஆவின் நிறுவனத்திற்க்கு பால் வினியோகம் செய்கின்றனர். இதில் பால் 35 லட்சம் லிட்டர் பால் ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்கின்றனர். இதில் உற்பத்தி விவசாயிகள் உற்பத்தி செய்யும் பாலுக்கான தொகையுடன் ஊக்கத்தொகை 3 ரூபாய் லிட்டருக்கு அந்தந்த பால் கூட்டுறவு சங்கங்களிலேயே பால் உற்பத்தி பணத்துடன் சேர்த்து வழங்கினர். இதனால் விவசாயிகள் எந்த காலதாமதம் இன்றி பால் உற்பத்தி பணத்துடன் ஊக்கத் தொகையை சேர்த்து பெற்றனர். தற்பொழுது 13-01-2025-ல் இருந்து பாலுக்கான ஊக்கத் தொகையை லிட்டருக்கு 3 ரூபாய் தனியாக ஆவின் நிறுவனமே பால் உற்பத்தியாளர் வங்கி கணக்கில் கால தாமதமாக வழங்குவதால் விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். ஆகையால் தாங்கள் பால் உற்பத்தி விவசாயிகளின் வாழ்வாதாரம் கருதி ஊக்கத்தொகை பால் உற்பத்தி பணத்துடன் சேர்த்து அந்தந்த பால் கூட்டுறவு சங்கத்திற்கே பழைய முறையில் வழங்க வேண்டுகிறோம்.

மேலும் பாலுக்கான ஊக்கத் தொகையை லிட்டருக்கு 3 ரூபாயில் இருந்து 5 ரூபாய் ஆகவும் பாலுக்கான கொள்முதல் விலையை 33ல் இருந்து 40 ஆகவும் இரண்டும் சேர்த்து லிட்டருக்கான விலையை 45 ரூபாய் ஆக வழங்கவும் கால்நடை தீவனங்கள் 50 சதவீத மானியத்துடன் வழங்கவும் வேண்டுகிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.