சுங்க கட்டண உயர்வை கண்டித்து தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

0 271
Stalin trichy visit

சமயபுரத்தில் சுங்க கட்டண உயர்வை கண்டித்து தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சுங்கச்சாவடியில் சுங்க கட்டண தொடர்ந்து உயர்த்தி வரும் மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளத்தினர் 100க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தியாவில் இன்று முதல் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் செயல்பட்டு வரும் சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை உயர்த்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஏற்கனவே சுங்கச்சாவடிகளில் அதிக அளவு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவதாகவும், இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வரும் நிலையில் தற்பொழுது மீண்டும் தமிழத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சுங்க கட்டண உயர்வை மத்திய அரசு அறிவித்திருப்பது என்பது மக்களுக்கு கூடுதல் சிரமத்தை ஏற்படுத்தும். எனவே சுங்க கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சுங்கச்சாவடி முன்பு பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக திருச்சி சமயபுரம் சுங்கச்சாவடியில் தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளத்தினர் 100க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசு சுங்கச்சாவடி கட்டணத்தை தொடர்ந்து உயர்த்தி வருகிறது.

தமிழகத்தில் காலாவதியான 32 சுங்கச்சாவடிகளை உடனடியாக மூட வேண்டும் என தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட
கோரிக்கை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Leave A Reply

Your email address will not be published.