மலைக்கோட்டை பகுதி கழகத்தினர் நடத்திய மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா – அன்பில் மகேஸ் பங்கேற்பு..!

0 302
Stalin trichy visit

ஏப்ரல்.02, திருச்சி தெற்கு மாவட்டத்தின் சார்பாக தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70 வது பிறந்தநாள் விா , திருச்சி தெற்கு மாவட்டம், கிழக்கு மாநகரம் மலைக்கோட்டை பகுதி கழகத்தின் சார்பாக பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, கிழக்கு மாநகர செயலாளர் திரு.மு.மதிவாணன், பகுதி கழக செயலாளர் திரு.மோகன், திரு.கே.என்.சேகரன் ஆகியோரும் கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட பொருட்களை வழங்கி சிறப்பித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.