திருச்சியிலிருந்து ஷார்ஜா சென்ற விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: பயணிகள் கடும் அவதி
திருச்சி, ஏப்.4 திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஷார்ஜா நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான ஓடுதளத்தில் நிறுத்தம்
திருச்சி விமான நிலையத்தில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு விமானம் இயக்கப்பட்டு வருகிறது, அதிலும் குறிப்பாக ஷார்ஜா,மலேசியா சிங்கப்பூர்,துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு அதிக அளவிலான விமான சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது
இந்த சேவைகளை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இன்று காலை 4 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் இரந்து ஷார்ஜா நோக்கி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட தயாராகிக் கொண்டிருந்த நிலையில் விமானத்தில் 113 பயணிகள் பயணம் செய்வதற்காக விமானத்தில் அமர வைக்கப்பட்டு விமானம் ஓடுதளத்தில் (ரன்வே) சற்று தூரம் சென்றது அப்போது விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து மீண்டும் விமானம் ஏப்ரான் பகுதிக்கு கொண்டுவரப்பட்டது. இதனை தொடர்ந்து தொழில் நுட்ப வல்லுநர்கள் விமானத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் சரி செய்வதற்கு தாமதம் ஏற்பட்டதை தொடர்ந்து விமானத்தில் அமர வைக்கப்பட்ட 113 பயணிகளும் விமானத்திலிருந்து இறக்கி விடப்பட்டு ஓய்வு அறையில் அமர வைக்கப்பட்டனர். பின்னர் பயணிகளுக்கு குடிநீர் மற்றும் உணவு வகைகளை விமான நிறுவனத்தினர் வழங்கினர். மீண்டும் விமானம் புறப்படும் நேரம் குறித்து தொழில்நுட்ப வல்லுநர்கள் விமானத்தை சரி செய்த பின்பு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் 113 பயணிகளும் பெரும் அவதியில் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்பட்டது