வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறித்த இளம்பெண் கைது!

0 331
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், தா.பேட்டை அருகே உள்ள சேனப்பநல்லூர் புதூர் கிராமத்தை சேர்ந்தவர் தாண்டவன். இவரது மனைவி லட்சுமி(வயது 80). இவர் வீட்டில் தனியாக இருந்தபோது வீட்டிற்குள் நுழைந்த இளம் பெண் ஒருவர் மூதாட்டி லட்சுமி கழுத்தில் அணிந்திருந்த ஐந்தரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடினார். இது குறித்து லட்சுமி, ஜெம்பு நாதபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில்

 

போலீசார் விசாரணை மேற்கொண்டனர். சந்தேகத்தின் பேரில் சேனப்பநல்லூர் புதூர் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவரின் மனைவி சங்கீதா(வயது 30) என்பவரை பிடித்து விசாரணை செய்த போலீசார் அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதைய டுத்து அவரது வீட்டில் சோதனை நடத்தினர். சோதனையில் சங்கீதா வீட்டில் ரூ.ஒன்னரை லட்சம் இருந்துள்ளது. மேலும் விசாரணையில், துறையூரில் உள்ள நகை கடையில் லட்சுமி மூதாட்டியிடம் இருந்து பறித்த ஐந்தரை பவுனை அடகு வைத்ததை சங்கீதா ஒப்புக் கொண்டார். இதையடுத்து போலீசார் செயினை பறிமுதல் செய்து சங்கீதாவை கைது செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.