லாரியின் கண்ணாடி உடைத்த நபர் கைது..

0 316
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள ஆலம்பாக்கத்தில் மது போதையில் லாரியின் கண்ணாடியை உடைத்த நபரை போலீசார் கைது செய்தனர்.

புள்ளம்பாடி அருகே வாண்டராம்பாளையம் கீழத் தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் சொந்தமாக லாரி வைத்து ஓட்டி வருகிறார். இந்நிலையில் அரசு அனுமதி பெற்ற மணலை ஆலம்பாக்கத்தில் இறக்குவதற்காக லாரியில் வந்த போது ஆலம்பாக்கம் வடக்கு தெருவை சேர்ந்த 44 வயதான தர்மராஜ் மது போதையில் லாரியின் கண்ணாடி உடைத்து தகராறு செய்துள்ளார். இது குறித்து சதீஷ்குமார் கல்லக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த கல்லக்குடி போலீசார் அவரை கைது செய்து லால்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி லால்குடி கிளை சிறையில் அடைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.