மீன் – இறைச்சி கடைகளுக்கான டெண்டர் விடும் நிகழ்வு
திருச்சியில் புதிதாக கட்டப் பட்டுள்ள மீன் மற்றும் இறைச்சி கடைகளுக்கான டெண்டர் விடும் நிகழ்வு மண்டலம் 2 வார்டு குழு அலுவலகத்தில் இன்று நடைபெற்றது
திருச்சி பாலக்கரை பகுதியில் உள்ள மாநகராட்சி மண்டலம் 2- வார்டு குழு அலுவலகத்தில் இன்று காலை திருச்சி காந்தி மார்க்கெட் பின்புறம் உள்ள சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட மீன் மற்றும் இறைச்சி கடைகளுக்கான டெண்டர் விடும் நிகழ்ச்சி மண்டலம் 2 மாநகராட்சி அலுவலகத்தின் துணை ஆட்சியர் மற்றும் உதவி ஆணையருமான வளவன் தலைமையில் இன்று நடைபெற்றது.
இந்த டெண்டர் விடும் நிகழ்ச்சியில் மொத்தம் 74 கடைகள் தரைத்தளத்திலும் முதல் தளத்தில் 74 கடைகள் என மொத்தம் 148 கடைகள் கட்டப்பட்டுள்ளது அதன்படி இன்று காலை 10 மணி அளவில் டெண்டர் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை திருச்சி மாவட்ட தலைவர் எஸ்.பி பாபு தலைமையில் வியாபாரிகள் மற்றும் இந்த டெண்டரில் ஏற்கனவே அப்பகுதியில் மீன் மற்றும் இறைச்சி கடை நடத்தி வந்த வியாபாரிகள் இந்த டெண்டரில் கலந்து கொண்டனர். முன்னதாக வார்டு குழு அலுவலகம் மண்டலம் இரண்டில் திருச்சி பாலக்கரை காவல் நிலைய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.