“கொதிக்கும் குழம்பில் தவறி விழுந்த சிறுவன்” நடந்தது என்ன!

0 358
Stalin trichy visit

திருச்சி மணப்பாறை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி கவுசல்யா. இவர்களுக்கு சுதர்சன்(வயது 5) என்ற மகன் உள்ளான். இந்த நிலையில் இவரது வீட்டில் நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கிருஷ்ணனின் வீட்டின் பின்புறத்தில் சமையல் வேலை நடைபெற்ற நிலையில், சுதர்சன் வீட்டின் பின்னால் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக குழம்பு கொதிக்கும்

 

பாத்திரத்தில் தவறி விழுந்துவிட்டான். இதை பார்த்த அவனது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் வலியால் துடித்த சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.