திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தாளக்குடியில் சொத்து தகராறில் அண்ணியை கொலை செய்தவருக்கு ஒரு பிரிவில் ஆயுள் தண்டனை ரூ. 5000 அபராதமும் மற்றொரு பிரிவில் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டார்.
தாளக்குடி வடக்கு காலனி தெருவை சேர்ந்தவர் அன்பு ராஜா இவரது மனைவி ராஜலட்சுமி..அன்புராஜாவின் தம்பி சந்துரு என்கின்ற,பாலசந்தர் இவர்கள் இருவருக்கும் சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2018 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9 ந்தேதி மாலையில் வீட்டில் இருந்த ராஜலட்சுமியை பாலசந்தர் கத்தியால் குத்தி கொலை செய்தார். இச்சம்பவம் குறித்து கொள்ளிடம் போலீசார் இரண்டு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து பாலச்சந்திரன் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். பின்னர் பிணையில் வெளியே வந்த பாலசந்தரை கடந்த 2021 ம் ஆண்டு ஏப்ரல் 4 ந்தேதி முதல் திருச்சி மத்திய சிறை காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை திருச்சி மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நீதிபதி தங்கவேல் நேற்று தீர்ப்பு வழங்கினார்.அதில் இபிகோ 302 வது பிரிவின் கீழ் ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 5000 அபராதமும்,இபிகோ 506 பிரிவின் கீழ் மூன்றாண்டு சிறை தண்டனையும் வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த உத்தரவை திருச்சி மத்திய சிறையில் இருக்கும் சந்துரு என்கின்ற பாலசந்தரிடம் போலீசார் வழங்கினர்.