நொச்சியம் சாலை விபத்தில் இருவர் படுகாயம்

0 411
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே நொச்சியம் ரெட்டை மண்டபத்தில் உள்ள திருச்சி சேலம் நெடுஞ்சாலையில் மோட்டார் பைக் மீது பின்னால் வந்த மோட்டார் பைக் மோதிய விபத்தில் இருவர் படுகாயம் அடைந்தனர்.

மண்ணச்சநல்லூர் அருகே பாச்சூர் தென்றல் நகரைச் சேர்ந்தவர் 43 வயதான நீதி மோகன். இவர் அரசு பேருந்து போக்குவரத்துக் கழக திருச்சி கண்ட்டோன்மென்ட் கிளையில் பேருந்து ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவர் தனது மோட்டார் பைக்கில் நம்பர் 1 டோல்கேட்லிருந்து பாச்சூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அதேபோல் நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் கிழக்கு தெருவை சேர்ந்த 22 வயதான கீர்த்திபிரியன் பின்னால் மோட்டார் பைக்கில் வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் திருச்சி சேலம் நெடுஞ்சாலையில் உள்ள ரெட்டை மண்டபம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது முன்னாள் சென்ற மோட்டார் பைக் மீது பின்னால் சென்ற மோட்டார் பைக் மோதி விபத்துக்களானது இதில் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் இருவரும் படுகாயம் அடைந்தனர். விபத்தை கண்ட அக்கம் பக்கத்தினார் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.