திருச்சி சிறை அதிகாரி பெயரில் தொடங்கப்பட்ட போலி முகநூல் கணக்கு முடக்கப்பட்டது

0 288
Stalin trichy visit

திருச்சி மத்திய சிறை அலுவலக சூப்பிரண்டாக பணியாற்றி வருபவர் திருமுருகன். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கப்பட்டது. இந்த முகநூல் கணக்கை தொடங்கிய மர்மநபர் திருமுருகனின் நண்பரிடம் பணம் கேட்டு வந்தார். இதுபற்றி அறிந்த சூப்பிரண்டு திருமுருகன் தனது பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கிய நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இந்த புகார் குறித்து விசாரணை நடத்திய சைபர் கிரைம் போலீசார், சிறை அதிகாரி பெயரில் தொடங்கப்பட்ட போலி முகநூல் கணக்கை முடக்கி உள்ளனர். மேலும், அந்த போலி முகநூல் கணக்கை டெல்லியிலிருந்து ஒருவர் தொடங்கி இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த நபர் குறித்து தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.