தோல் வறட்சி நோயினால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நிதி மற்றும் மருத்துவ உதவி வழங்கிய அமைச்சர்

0 407
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே தில்லாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமிக்கு பிறவியிலேயே தோல் வறட்சி நோயினால் பாதிக்கப்பட்டு கடினமான வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த வாரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும்படி ஆட்சியிடம் மனு அளித்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்,நேரு சிறுமியின் இல்லத்திற்க்கு நேரில் சந்தித்து சிறுமிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார்.பின் னர் அவர்களுக்கு உதவியாக மண்ணச்சநல்லூர் எம்எல்ஏ கதிரவன் தனது சொந்த நிதியிலிருந்து ரூ.50,000 ரொக்கத்தை அமைச்சர் கே.என்.நேரு மூலம் சிறுமியின் பெற்றோரிடம் வழங்கினார்.

இந்த சிறுமிக்கு
கான்ஜென்டியல் ஐதியோசிஸ் எனப்படும் இந்த அரிய வகை பிறவி நோயானது 3 லட்சத்தில் ஒருவருக்கு மட்டுமே வரக்கூடிய பிறவி நோயாகும். மரபணு கோளாறினால் தோலில் ஏற்படுகின்ற இந்த நோயினால், தோல் வறண்டு வெடிப்புடன் காணப்படும். சமயங்களில் புண்களும், புண்களினால் தழும்புகளும் ஏற்படலாம். இந்நோய் குளிர்காலங்களில் அதிக வறட்சியாலும், தோலில் அதிக வெடிப்புடனும் காணப்படும். மேலும் அந்த சிறுமியின் கண் இமைகள் எக்ட்ரோபியான் எனப்படும் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதால் கண் இமைகளில் சுருக்கம் ஏற்பட்டுள்ளது.
இப்படியொரு அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுமியை உடனடியாக அரசு மருத்துவ மனையில் சேர்;த்து உயர் சிகிச்சை அளிக்க நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு உத்தரவிட்டதன் அடிப்படையில், சிறுமியை திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மருத்துவர் குழுவினரின் கண்காணிப்பில் உள்ள சிறுமிக்கு தேவையான சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இந்நிகழ்வின்போது, மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப்குமார், மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர். கதிரவன் மற்றும் மருத்துவ அலுவலர்கள் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.