பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பலி
திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள திண்ணனூர் பகுதியில் வசிப்பவர் அமர்நாத் இவர் அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார் துறையூர் அருகே உள்ள மங்கப்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை காண்பதற்காக தனது கல்லூரி நண்பர்களன ஜெய பெருமாள். மற்றும் சீனிவாசன் ஆகிய மூவரும் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை பார்த்துவிட்டு மீண்டும் சொந்த் ஊர் திரும்பி உப்பிலியபுரம் பகுதியில் வரும்போது எதிரே வந்த இருசக்கர வாகனம் இவர்கள் மீது எதிர்பாராத விதமாக மோதியதில்
நண்பர்கள் மூவரும் தூக்கி எறியப்பட்டு தரையில் விழுந்தனர் இதில் அமர்நாத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால்
அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் மற்றவர்கள் துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் இது குறித்து உப்பிலியபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் சடலத்தை கைப்பற்றிய காவல் துறையினர் துறையூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர் இச்
சம்பவம் சக மாணவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது