மணப்பாறையில் அரசு பேருந்தின் பின் பக்க கண்ணாடி உடைப்பு

0 406
Stalin trichy visit

திருச்சி, அக். 18 திருச்சி மாவட்டம், மணப்பாறை பேருந்து நிலையத்தில் இருந்து மீனவேலி நோக்கி அரசு பேருந்து ஒன்று மாணவ- மாணவிகள் மற்றும் பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டது. பேருந்து நிலையத்தை விட்டு பேருந்து வெளியில் வந்ததும் திடீரென பேருந்தின் பின் பக்க கண்ணாடி உடைந்து விழுந்தது. இதனால் பேருந்தில் இருந்த மாணவ- மாணவிகள் மற்றும் பயணிகள் உள்ளிட்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் பேருந்தை ஓட்டுனர் உடனடியாக நிறுத்தி பார்த்த போது பேருந்தின் கண்ணாடியை உடைத்தவர்கள் யார் என்று தெரியவில்லை. உடனே பயணிகள் அனைவரும் பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்ட நிலையில் சம்பவம் தொடர்பாக மணப்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave A Reply

Your email address will not be published.