கடன் வேண்டுமா என கேட்டு தொல்லை : அரை நிர்வாணத்தில் தொழிலாளி போராட்டம்

0 484
Stalin trichy visit

திருச்சி, அக். 18 திருச்சி மாவட்டம், மணப்பாறையைச் சேர்ந்தவர் சங்கர். இவர் சம்சா வியாபாரம் செய்து வருகிறார். இவர் இருசக்கர வாகனம் ஒன்று வாங்கி அதற்கான கடன் தொகை செலுத்தி விட்டதாக கூறப்படுகிறது. பின்னர் மீண்டும் அவரிடம் கடன் வேண்டுமா என்று தனியார் நிறுவனத்தின் சார்பில் தொடர்ந்து அலைபேசி மூலம் தொடர்ந்து கொண்டு பேசி வந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சம்சா சங்கர் சம்மந்தப்பட்ட நிறுவனம் முன்பு தன்னிடம் கோவணமும், துண்டும் தான் உள்ளது? என்னை ஏன் மீண்டும் மீண்டும் அழைத்து கடன் வேண்டுமா என்று தொந்தரவு செய்கிறீர்கள் என்று கூறி சாலையில் இருசக்கர வாகனத்துடன் அரை நிர்வாணத்தில் போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்த போலீசார் அவரை சமாதானம் செய்து வைத்து அனுப்பி வைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.