மேற்கூரை பெயர்ந்து விழும் நிலையில் வி.ஏ.ஓ. அலுவலகம் : பொதுமக்கள் அச்சம்

0 313
Stalin trichy visit

கருடமங்கலம் கிராம நிர்வாக அலுவலகத்தில் பெயர்ந்து விழும் மேற்கூரையின் காரைகள்.அச்சத்துடன் மனு கொடுக்கச் செல்லும் பொதுமக்கள்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் கருடமங்கலத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் மேற்கூரைகளின் காரைகள் பெயர்ந்து விழுகிறது. அச்சத்துடன் மனு கொடுக்க செல்லும் பொதுமக்கள்.

கருடமங்கலம் ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதற்கான கட்டிடம் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இந்நிலையில் கட்டிடத்தின் உறுதித் தன்மை இழந்த்தால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மாமரத்து பணிகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அலுவலகம் பொதுமக்களின் பயன்பாட்டில் இருந்து வந்தது. தற்போது கிராம நிர்வாக அலுவலகத்தில் உள்ள மேற்கூரைகளின் காரைகள் பெயர்ந்து விழுகிறது. இதனால் உள்ளே பணி செய்யும் அலுவலர்கள் மற்றும் மனு கொடுக்கச் செல்லும் பொதுமக்கள் அச்சத்துடனே சென்று வருகின்றனர். எனவே மேற்கூரையின் காரைகள் பொதுமக்கள் மீது விழுந்து விபத்து ஏற்படுவதற்கு முன் போர்க்கால அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலகத்தை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். மேலும் கிராம நிர்வாக அலுவலர் புதிய அலுவலகம் கட்டித் தரக் கோரி வருவாய் ஆய்வாளர் மூலம் லால்குடி வட்டாட்சியருக்கு மனு அளித்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.