அன்பில் பொய்யாமொழி நினைவு நாள் : அமைச்சர் நேரு மலர் தூவி மரியாதை
திருச்சி, ஆக.28 முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான, தி.மு.க. தலைவரும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின நண்பர் மறைந்த அன்பில் பொய்யாமொழியின் 25 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி கிராப்பட்டி இல்லத்தில் உள்ள அவரது திருவுருவப்படத்திற்கு அமைச்சர் கே.என்.நேரு மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் அமைச்சர் அன்பில் மகேஸ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி, மண்டல தலைவர் மதிவாணன் உள்பட பலர் உள்ளனர்.