பாலியல் வழக்கின் தீர்ப்பு ஆறுதல் அளிக்கிறது : திருமாவளவன் பேட்டி

0 252
Stalin trichy visit

திருச்சி மே 28 அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கின் தீர்ப்பு ஆறுதல் அளிக்கிறது – திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர், தொல்.திருமாவளவன் பேட்டி

கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று சென்னை செல்வதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அதில் கூறுகையில்…

திமுக கூட்டணி சார்பில் மாநிலங்களவை வேட்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள மக்கள் நீதி மைய கட்சி தலைவர் கமலஹாசனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

இதேபோல் திமுகவில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள, வில்சன் ,கவிஞர் சல்மா உள்ளிட்ட மூன்று பேருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோன்.

அண்ணா பல்கலைக்கழக மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் குற்றவாளி என்பதை நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்திருப்பது ஆறுதலை தருகிறது. இதனை வரவேற்கிறேன்.தீர்ப்பு வந்த பின்னர் கருத்துக்களை தெரிவிக்கிறேன்.
நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக எதிர்கட்சிகள் ஆளுங்கட்சிக்கு எதிராக கருத்துக்களை கூறுவது வியப்பாக உள்ளது.
இந்த விவகாரத்தில் நேர்மையாக தான் விசாரணை நடந்துள்ளது என தெரிவித்தார். பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் மேலும் பலர் சம்பந்தப்பட்டிருப்பதாக சந்தேகம் இருந்தால் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாம். சி பி‌ஐ விசாரணை கேட்கலாம்.

தமிழ் தான் திராவிட மொழிகளின் தாய் என்பதை தேவனாய பாவணர் போன்ற தமிழ் அறிஞர்கள், மொழியியல் வல்லுநர்கள் உறுதிப்படுத்தி உள்ளார்கள்.

இன்று கன்னடம், மலையாளம் பேசுபவர்கள் அந்த உண்மையை ஏற்க தயங்கலாம் ஆனால் வரலாறு வரலாறு தான் இது உண்மை என தெரிவித்தார்.

இந்த செய்தியாளர் சந்திப்பின் பேட்டியின் போது திருச்சி கரூர் மண்டல செயலாளர் தமிழாதன்,
மாவட்ட செயலாளர்கள் சக்திஆற்றலரசு, வழக்கறிஞர் கலைச்செல்வன், கரூர் மாவட்ட செயலாளர் சக்தி, திருச்சி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தங்கதுரை, பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் கிட்டு ஆகியோர் உடன் இருந்தனர்.

 

Leave A Reply

Your email address will not be published.