பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற திருடனை விரட்டி பிடித்த கிராம மக்கள்
திருச்சி, மே 17 வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற திருடனை கிராம மக்கள் விரட்டிப் பிடித்து தர்மஅடி கொடுத்தனர்.
திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள பாகளவாடி கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாதி அவரது மனைவி லதா காய்கறி வியாபரம் செய்து வருகின்றனர்
இவர்கள் வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது அதிகாலை 2.30 மணி அளவில் மர்மநபர் ஒருவர் வீடு புகுந்து லதாவின் கழுத்தில் இருந்த தங்கச் செயினை பறிக்க முயன்றுள்ளார் அப்பொழுது லதா சுதாரித்துக்கொண்டு கூச்சலிட்டுள்ளார்
இதையடுத்து திருடன் தப்பி ஓடிய நிலையில் கிராமமக்கள் உதவியுடன் அருகில் இருக்கும் காட்டுக்குள் தேடியபொழுது திருடன் முட்புதரில் இருப்பது தெரியவந்தது .அவனைப் பிடித்து மரத்தில் கட்டி வைத்து தர்மஅடி கொடுத்தனர்.
தகவலறிந்து நிகழ்விடத்திற்குச் சென்ற புலிவலம் காவல்துறையினர் மரத்தில் கட்டி வைத்துத்திருந்த திருடனை மீட்டனர். பிடிபட்ட திருடனை புலிவலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்க்கொண்டு வருகின்றனர்