ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் ஸ்ரீரங்கம் கோவிலில் சுவாமி தரிசனம்
திருச்சி, மே 17 ஆர்.எஸ்.எஸ். இயக்கத் தலைவர் மோகன் பகவத் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள கடந்த 2 நாட்களுக்கு முன்னர் திருச்சி வந்தார்.
இந்நிலையில் இன்று ஸ்ரீரங்கம் தரிசனத்திற்கு வருகை தந்த சர்சங்கசாலக் மானனீய ஸ்ரீமோகன்பகவத்-க்கு கோவில் ஸ்ரீவைணவ மதகுருமார்களான ஸ்தலத்தார்கள்,தீர்த்தகாரர்கள் மங்களாசாசனங்களை பெற்று மணியக்காரர்,அர்ச்சகர்,ஸ்தானிகர், திருக்கோவில் அதிகாரிகள் உடனிருக்க பெரியபெருமாள்,ஸ்ரீரங்கநாச்சியார்,பகவத் ஸ்ரீராமாநுஜர்,சக்கரத்தாழ்வார் தரிசனம் மேற்கொண்டார்.