வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை திருட்டு

0 264
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே எம். ஆர். பாளையத்தில் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்கள்.மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு.

சிறுகனூர் அருகே எம். ஆர். பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி.இவர் வீட்டிலேயே பஞ்சர் கடை வைத்து நடத்தி வருகிறார்.
இந்நிலையில் நேற்று ஆடி அமாவாசையால் அப்பகுதியில் உள்ள கோயிலுக்கு சாமி கும்பிடுவதற்காக வீட்டை பூட்டிவிட்டு சென்று விட்டார். இவருடைந மனைவி 100 நாள் பணிக்கு சென்று விட்டார்.இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்ம நபர்கள் பட்டப்பகலிலேயே வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 10 பவுன் நகைகளை திருடிச் சென்றனர். கோவிலுக்கு போய்விட்டு வீட்டிற்க்கு திரும்பி வந்த ரவி வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் பீரோவில் இருந்த 10 பவுன் நகைகள் திருட்டுப் போனது தெரியவந்தது.

இது குறித்து சிறுகனூர் காவல் நிலையத்திற்கு ரவி தகவல் கொடுத்தார். தகவல் அறிந்த சிறுகனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்தனர் மேலும் சம்பவ இடத்திற்கு மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். கைரேகை நிபுணர்கள் அங்குள்ள தடயங்களை சேகரித்தனர். மோப்பநாய் வீட்டில் இருந்து சுடுகாடு வரை ஓடிவிட்டு நின்றது. இந்த சம்பவம் குறித்து சிறுகனூர் போலீசார் விசாரணை செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.