துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனுஅளிக்க வரும் பொதுமக்களுக்கு மனஉளைச்சலை ஏற்படுவதாக குற்றச்சாட்டு

0 9,775
Stalin trichy visit

துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கோரிக்கை மனு அளிக்க வருபவர்கள்,மன உளைச்சலுக்கு ஆளாக்கப்படுவதாக புகாரெழுந்துள்ளது.

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியராக பணி புரிந்து வருபவர் புஷ்பராணி இவர் மனு அளிக்க வரும் பொது மக்களிடம் வாங்கும் மனுக்களை பரிசீலனை செய்யாமல் குறிப்பாக பெண்களிடம்த்ன்ரகுறைவாக நடந்து கொள்பதோடு தகாத வார்த்தைகளால் பேசி வருவதாக புகாரெழுந்துள்ளது. து.ரங்கநாதபுரத்தை சேர்ந்த செல்லையா மனைவி தனம் என்பவர் தனது கணவர் கடந்த 2020 ஆம் ஆண்டு இறந்து விட்டதாகவும் அதற்காக அவர் வாரிசு சான்றிதல் பெறுவதற்காக துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளதாகவும், மனு மீதான விசாரணையை
ரெங்கநாதபுரம் கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் மற்றும் வட்டாட்சியர் இது வரை செய்யவில்லை என்றும்,
மனுவுடன் தகுந்த ஆதாரங்களான
கணவர் இறப்பு சான்றிதழ்
ஆதார் அட்டை
ரேஷன் கார்டு.நகல் மற்றும் சொத்து பத்திரம் வாக்காளர் அடையாள அட்டை ஆகியவை சமர்ப்பித்தும் அதை ஏற்க மறுத்த வட்டாட்சியர் தன்னை தகாத வார்த்தைகளால் பேசி திருப்பி,அனுப்பி உள்ளதாக தெரிவித்தார் இதனால் மன உளச்சலில் தனம் இருபதாகவும் தெரிவித்துள்ளார்
மன உளச்சலில் உள்ள தனத்திற்க்கு அசம்பாவித ஏதும் நடந்தால் துறையூர் வட்டாச்சியர் புஷ்பராணியே பொறிப்பு என தெரிவித்திள்ளார்
தொடர்ந்து துறையூர் வட்டாட்சியர் புஷ்பராணி மேல் குற்றச்சாட்டுகள் பல வந்த வண்ணம் உள்ளன
இதனை அறிந்த இந்திய வாக்களர் விழிபுணர்வு சங்க நிறுவன தலைவர் தியாகராஜன் வட்டாட்சியரிடம் கேட்ட பொழுது அவர் தகுந்த முறையான பதில் அளிக்கவில்லை என்றும் இதனால் தங்கள் சார்பில் துறையூர் வட்டாட்சியரை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்ய போவதாக கூறியுள்ளார். மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் நடவடிக்கை எடுப்பாரா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்

Leave A Reply

Your email address will not be published.