திருவெறும்பூர் ரயில் நிலைய மேம்பாட்டு பணி: துரை வைகோ எம்.பி. கோரிக்கை மனு

0 177
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 15 திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ திருச்ச கோட்ட இரயில்வே மேலாளரிடம் திருவெறும்பூர் ரயில் நிலைய மேம்பாட்டுக்காக கோரிக்கை முன்வைத்து மனு அளித்தார்.

திருச்சி கோட்ட இரயில்வே அலுவலகத்தில் DRM அவர்களை சந்தித்து, திருவெறும்பூர் இரயில் நிலைய மேம்பாட்டுக்கான சில கோரிக்கைகளை முன்வைத்து  துரை வைகோ  எம்.பி. கடிதம் கொடுத்தார்.

அதில், சோழன் விரைவு இரயிலை திருவெறும்பூர் இரயில் நிலையத்தில் நிறுத்திச் செல்லுவதற்கு தாங்கள் ஏற்கனவே ஒப்புதல் அளித்தும் இதுநாள் வரை நிறுத்தப்படவில்லை. இதனை முக்கிய கோரிக்கையாக கருதி விரைந்து நிறுத்திட உத்தரவிட வேண்டும் என்றும்,

அத்துடன் செம்மொழி, எர்ணாகுளம் – காரைக்கால், இராமேஸ்வரம் – திருப்பதி, இராமேஸ்வரம் – சென்னை ஆகிய விரைவு இரயில்களையும் திருவெறும்பூர் இரயில் நிலையத்தில் நின்று செல்ல ஆவன செய்திட வேண்டியும்,

திருவெறும்பூர் பேருந்து நிலையத்திலிருந்து இரயில் நிலையம் செல்வதற்கு இரயில்வே காம்பவுண்ட் சுவர் ஒட்டிய பாதை தற்போது திறக்கப்பட்டு, அந்தப் பாதையில் மாநகராட்சி தார்ச் சாலைக்கும், இரயில் நிலைய இடத்தில் அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் தளத்திற்கும் இடையில் சுமார் 130 அடி மண் தரையாக உள்ள இடத்தில் சாலை அமைத்து தர வேண்டியும் கோரிக்கை கடிதம் கொடுத்து அதன் அவசியத்தை எடுத்துரைத்தேன்.

Leave A Reply

Your email address will not be published.