தொட்டியம் பேரூராட்சி செயல் அலுவலர் பொறுப்பேற்பு
திருச்சி, ஆக. 7 திருச்சி மாவட்டம் தொட்டியம் தேர்வுநிலை பேரூராட்சி செயல் அலுவலராக எஸ்.இளவரசி பதவியேற்றார். இவர் இதற்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலராக பணியாற்றி வந்தார்.
புதிதாக பதவி ஏற்ற செயல் அலுவலருக்கு தொட்டியம் பேரூராட்சி தலைவர் சரண்யாபிரபு, துணைத் தலைவர் எஸ்.ஏ.எஸ். ராஜேஷ், மற்றும் அனைத்து வார்டு கவுன்சிலர்கள் பேரூராட்சி அனைத்து பணியாளர்களும் பணி சிறக்க பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர்.