திருச்சி தில்லைநகர் சின்னசாமி நகரை சேர்ந்தவர் மணிகண்டன் மின்வாரிய அலுவலகம் எதிரே பாலத்தின் கீழ் புறம் மூங்கில் கூடை, ஏணி தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார் நேற்று இரவு வேலை முடித்து வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது நள்ளிரவு திடீரென மூங்கில் கழிவுகள் தீ பிடித்து எரிந்துள்ளது. வித்தி ஆர் பரவி அருகில் நின்ற இரண்டு லோடு ஆட்டோ ஒரு பயணிகள் ஆட்டோ மணிகண்டனின் ஆகியவை எரிந்தது.

தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்தனர். மேலும் இது சதி வேலையா அல்லது புகை பிடித்து விட்டு யாரும் சிகரெட் துண்டுகளை அணைக்காமல் போட்டுள்ளதால் தீப்பிடித்ததால் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.