திருச்சிக்கு டைடல் பார்க்..! தெறிக்கவிட்ட அமைச்சர் தென்னரசு..!
சென்னை.ஏப்ரல்.6, திருச்சியில் ரூபாய் 600 கோடி மதிப்பீட்டில் தகவல் தொழில்நுட்பக் கட்டடம் (டைடல் பார்க்) அமைக்கப்படும் என்று, தொழிற்துறை அமைச்சர் தங்கம்.தென்னரசு இன்று நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டத்தில் பொதுத்துறை நிர்வாகங்கள் நிறையவே இருந்தாலும், சென்னை, கோயமுத்துார், மதுரை போன்ற மாவட்டங்களில் தகவல் தொழில்நுட்பப் பூங்காவானது (டைடல் பார்க்) இருப்பது போல், திருச்சி மாவட்டத்திற்கு இல்லையே என்ற வருத்தம் பொதுமக்கள் மற்றும் இளைஞர்களிடம் வெகு நாட்களாக இருந்து வந்த நிலையில், அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, இன்று தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை தொடர்பான மானியக் கோரிக்கையின் மீது விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, அமைச்சர். தங்கம்.தென்னரசு பல புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், ரூபாய். 600 கோடி மதிப்பீட்டிலும், சுமார் 10 லட்சம் சதுரடியிலும், திருச்சியில் டைடல் பார்க் அமைக்கப்படும் என்றும், இதன்மூலம், 10,000 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பும் உருவாக்கப்படும் என அமைச்சர் அறிவித்தது, எங்களின் நீண்ட நாள் கோரிக்கையானது நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்றும், இந்த அறிவிப்பு எங்களை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாகவும் திருச்சி மாவட்ட மக்கள் கூறுகின்றனர்.