அமாவாசை மண்டபம் கட்டும் பணி : காணொளி மூலம் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

0 242
Stalin trichy visit

திருச்சி, ,ஏப். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து இன்று திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பெருந்திட்ட வளாகத்தில் ரூ.3.78 கோடி மதிப்பீட்டில் அமாவாசை மண்டம் கட்டும் பணியை காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் கலந்து கொண்டு அமாவாசை மண்டம் கட்டும் இடத்தினை பார்வையிட்டார். இந்நிகழ்வில் லால்குடி வருவாய் கோட்டாட்சியர் வைத்தியநாதன், இந்து சமய அறநிலையத்துறை இணை இயக்குநர்கள் செல்வராஜ், கல்யாணி, இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள்,அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.