மாகாளிக்குடி சுடுகாட்டில் நாளை ஒப்பாரி வைக்கும் போராட்டம்

0 454
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே மாகாளிக்குடியில் உள்ள சுடுகாட்டில் ச. கண்ணனூர் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாளை ஒப்பாரி வைக்கும் போராட்டம் நடைபெற உள்ளது.

பொதுமக்கள் கோரிக்கையை அலட்சியப்படுத்தாதே, சுடுகாட்டுக்கான பாதை கொட்டகை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ச. கண்ணனூர் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாகாளிக்குடி நிர்வாகி அங்கம்மாள் தலைமையில் நாளை 20ம் தேதி சுடுகாட்டில் ஒப்பாரி வைக்கும் போராட்டம் நடைபெற உள்ளது. இந்தப் போராட்டத்தில் மாவட்ட செயலாளர் ஜெயசீலன் சிறப்புரை ஆற்ற உள்ளார் மாவட்ட செயற்குழு சந்திரன் கிழக்கு ஒன்றிய செயலாளர் கனகராஜ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.