பணக்காரனாக வேண்டும் என்ற ஆசையில் டிராக்டர் திருட்டு

0 454
Stalin trichy visit

திருச்சி துறையூரில் ரூபாய் 20 லட்சம் மதிப்பிலான டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களை திருடிய கும்பல் குற்றப்பிரிவு காவல் துறையினரால் அதிரடியாக கைது – “எப்படியும் பணக்காரனாக ஆக வேண்டும் என்கிற ஆவலில் திருடியதாக இளைஞர்கள் தகவல்.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே சந்தேகத்திற்கிடமாக வாலிபர் ஒருவர் நிற்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற துறையார் போலீசார் அங்கு டிராக்டர் வண்டி உடன் நின்று கொண்டிருந்த வாலிபரை விசாரித்தனர்.

அப்போது அவரது பெயர் ராமராஜ் என்பதும் துறையூர் அருகே உள்ள கோனப்பாதை கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. அவரிடம் இருந்த டிராக்டர் வண்டிக்கான ஆர்சி.புக் இல்லாததால் போலீசார் தீவிரமாக விசாரணை செய்தனர் அப்போது அவருடன் சேர்ந்து திருட்டு வேலையில் ஈடுபட்ட மண்ணச்சநல்லூர் தாலுகா வாலையூர் கிராமத்தைச் சேர்ந்த முத்துக்குமார் மற்றும் கோனப்பாதை கிராமத்தைச் சேர்ந்த பிரசாந்த் என்ற வாலிபருடன் சேர்ந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவரது வீட்டின் அருகே உள்ள குண்டு ஆற்று பாலம் அடியில் இரண்டு டிராக்டர்,4 டிப்பர் ஒரு தண்ணி லாரி உழவுக்கு பயன்படும் 2 கலப்பைகள் மற்றும் 50 லிட்டர் மண்ணெண்ணெய் ஆகியவற்றை தார்ப்பாய் கொண்டு மூடி மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு,

இதனையடுத்து துறையூர் குற்றப்பிரிவு காவல்துறையினர் மொத்தம் 20 லட்சம் மதிப்பிலான வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேலும் இவ்வழக்கில் கைது
செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான ராமராஜ் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு விபத்தில் கை உடைந்த தனது மகனின் மருத்துவ செலவிற்காக திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதாகவும் வாழ்க்கையில் முன்னேறி, பல லட்ச ரூபாய் மதிப்பிலான பெரிய லாரி வாங்கி தொழில் செய்யவேண்டும்.  பணக்காரனாக ஆக வேண்டும்
என்ற எண்ணத்தினாலும் திருடியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

தொடர்ந்து அவர்கள் 3 பேரையும துறையூர் குற்றப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் கலைச்செல்வன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து துறையூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

Leave A Reply

Your email address will not be published.