மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு

0 388
Stalin trichy visit

திருச்சி-சென்னை பைபாஸ்சாலையில் செந்தண்ணீர்புரம் அருகே சாலையோரம் இருந்த மரம் ஒன்று நேற்று இரவு திடீரென முறிந்து விழுந்தது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த போக்குவரத்து போலீசார் அங்கு சென்று சாலையில் முறிந்து விழுந்த மரத்தை அறுத்து அப்புறப்படுத்தினார்கள்.

இதற்கிடையே வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பி விட்டு போக்குவரத்தை சீர்படுத்தினர். சிறிது நேரத்துக்கு பிறகு அங்கு மீண்டும் போக்குவரத்து சீரானது.

Leave A Reply

Your email address will not be published.