காய்கறி ஏற்றிச்சென்ற சரக்கு வேன் சாலையில் கவிழ்ந்து விபத்து
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே மதுரை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் யாகபுரம் அருகே சரக்கு வேன் செல்லும்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது.
இதில் காய்கறி மூட்டைகள் சாலையில் சிதறியது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக ரோந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்கள் உதவியுடன் மூட்டைகளை சாலையிலிருந்து அப்புறப்படுத்தினர். இதில் ஓட்டுனர் காயங்கள் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.