சாலை விபத்தில் அடையாளம் தெரியாத முதியவர் உயிரிழப்பு ….

0 341
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள கல்லக்குடி அடுத்த கீழ அரசூர் பகுதியில் உள்ள திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி 80 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவர் உயிரிழந்தார்.

புள்ளம்பாடி அடுத்த கல்லக்குடி அருகே கீழரசூர் திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் 80 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத வாகனம் முதியவர் மீது மோதி விட்டு தப்பி சென்றது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

 

அவர் பெயர்,முகவரி,எந்த ஊரை சேர்ந்தவர் எங்கிருந்து வந்தார் என தகவல் தெரியவில்லை. இது குறித்து தகவல் அறிந்த கல்லக்குடி போலீசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.