மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு குறித்த பயிற்சி

0 472
Stalin trichy visit

திருச்சி, ஆக.3 திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு,பள்ளி கல்வித்துறை, சமூகப் பாதுகாப்பு துறை,காவல் துறை இணைந்து திருச்சி, மணப்பாறை கல்வி மாவட்டத்தை சேர்ந்த அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான குழந்தை உரிமை பாதுகாப்பு குறித்த பயிற்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி தலைமை தாங்கினார். திருச்சி கல்வி மாவட்ட அலுவலர் சுவாமிமுத்தழகன் வரவேற்புரையாற்றினார். மணப்பாறை கல்வி மாவட்ட அலுவலர் செல்வி முன்னிலை வகித்தார். மாவட்ட சட்டப்பணி ஆணைக் குழு தலைவர் சோமசுந்தரம் பயிற்சி தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். குழந்தை நலக்குழு தலைவர் மோகன், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு நிறுவனம் சாராத பாதுகாப்பு அலுவலர் முத்துமாணிக்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
குழந்தை உரிமை பாதுகாப்பு குறித்து மூத்த வழக்கறிஞர் மார்டின், குழந்தை நலன் சார்ந்த சட்ட நடைமுறைகள் குறித்து குழந்தை நலக்குழு உறுப்பினர் மருத்துவர் பிரபு, குழந்தைகள் மறுவாழ்வு குறித்து தியாகராஜன் ஆகியோர் பயிற்சி அளித்தனர். குழந்தை உரிமை பாதுகாப்பு குறித்த பயிற்சியில் திருச்சி, மணப்பாறை கல்வி மாவட்டத்தை சார்ந்த உயர்நிலை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக உதவி திட்ட அலுவலர் அன்பு சேகரன் நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.