காவிரி ஆற்றில் மூழ்கிய 12 ஆம் வகுப்பு மாணவர்
திருச்சி மதுரை ரோடு ஜீவா நகரை சேர்ந்தவர் சக்திவேல். எலக்ட்ரீசியன்். இவரது மகன் முகேஷ் குமார் (வயது 17). இவர் காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள சையது முர்துஷா பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலையில் பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு செல்லாமல் திருச்சி மேலச் சிந்தாமணி பகுதியிலுள்ள காவிரி ஆற்றுக்கு சென்றுள்ளார். பின்னர் அவர் காந்திபடித்துறையில் பள்ளி புத்தகப்பையை வைத்து விட்டு குளிக்க ஆற்றில் இறங்கியதாக தெரிகிறது. அப்போது, ஆற்றில் தண்ணீர் வேகம் அதிகமாக இருந்ததால் மாணவர் முகேஷ்குமார் ஆற்றுக்குள் இழுத்து செல்லப்பட்டார். இதை பார்த்த அங்கு குளித்துக்கொண்டிருந்தவர்கள் கோட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்தக்கு வந்து அந்த மாணவரின் பையிலிருந்து பெயர், விலாசம் எடுத்து அவரது வீட்டிற்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் பெற்றோர்கள் சம்பவ இடத்திலிருந்து பல்வேறு பகுதியில் தேடி பார்த்தனர். அதேபோல் தீயணைப்பு வீரர்களும் மாணவரை தேடினர். ஆனால் மாணவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இரவாகியதால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இன்று மீண்டும் மாணவரை தேடும் பணி நடைபெறும் என்று தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.