விவசாயிகளுக்கு சிறுதானியங்கள் சாகுபடி குறித்து பயிற்சி

0 386
Stalin trichy visit

திருச்சி, நவ. 30  திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பூனாம்பாளையம் கிராமத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு சிறுதானியங்கள் சாகுபடி குறித்து பயிர் அடிப்படையிலான பயிற்சி இன்று நடைபெற்றது.

இதில் வேளாண்மை உதவி அலுவலர் பார்த்திபன் வரவேற்புரையாற்றினார்.

வேளாண்மை அலுவலர் ஐஸ்வர்யா தலைமை ஏற்று நடப்பு நிதி ஆண்டில் உள்ள திட்டங்கள் குறித்து விளக்கவுரை ஆற்றினார்.

சிறுதானியங்கள் சாகுபடி அவசியம் குறித்தும், சாகுபடி தொழில்நுட்பம் குறித்தும், நாளாந்தா வேளாண்மை கல்லூரி பேராசிரியர் குணா உரை ஆற்றினார்.

நிறைவாக வேளாண்மை உதவி அலுவலர் பாஸ்கர் நன்றி கூறினார்.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மண்ணச்சநல்லூர் வேளாண்மை உதவி அலுவலர் பார்த்திபன் செய்திருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.