பயிர்களில் நீர் மேலாண்மை குறித்து பயிற்சி

0 390
Stalin trichy visit

திருச்சி, மே 7  தமிழ்நாடு நீர் வள – நில வள திட்டத்தின் கீழ் பயிர்களில் நீர் மேலாண்மை குறித்து பயிற்சி.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே துடையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் வேளாண்மை உதவி இயக்குநர் செல்வராணி தலைமையில் தமிழ்நாடு நீர் வள நில வள திட்டத்தின் கீழ் பயிர்களில் நீர் மேலாண்மை குறித்து பயிற்சி நடைபெற்றது.

இதில் வேளாண்மை அலுவலர் தேசிங்குராஜன் வரவேற்புரையாற்றினார். . வேளாண்மை உதவி இயக்குநர் செல்வராணி பயிர்களில் நீர் மேலாண்மை முறைகள் பற்றியும் நடப்பு நிதி ஆண்டில் உள்ள இடுபொருட்கள் மானிய திட்டங்கள் பற்றி உரையாற்றினார்.

விதை சான்றளிப்பு துறை சார்பில் விதை சான்று அலுவலர் ரமேஷ், தோட்டக்கலை துறை சார்பில் உதவி தோட்டக்கலை அலுவலர் அகிலா, வேளாண்மை பொறியியல் துறை சார்பில் உதவி பொறியாளர் திவ்யா, வேளாண்மை விற்பனை மற்றும் வணிக துறை சார்பில் உதவி வேளாண்மை அலுவலர் பரமேஸ்வரி இதில் கலந்து கொண்டு தங்கள் துறை சார்ந்த திட்டங்களை எடுத்துரைத்தனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வேளாண்மை உதவி அலுவலர் பார்த்திபன் செய்திருந்தார்.

இமயம் வேளாண்மை கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களும், MIT வேளாண்மை கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களும் முன்னோடி விவசாயிகள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.