கதண்டுகள் கடித்து 6 பேருக்கு சிகிச்சை!
திருச்சி மாவட்டம் துறையூர் அருகேயுள்ள சிக்கத்தம்பூர் ஏரிக்கரையில் உள்ள தேரடியான் கோயிலில் நடைபெற்ற வழிபாட்டில் அதே ஊரைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். இவர்களில் வினோத்(வயது 36), பழனிசாமி(வயது 50) உள்ளிட்ட 6 பேர் கோயிலுக்கு நடந்து சென்ற போது ஏரிக்கரைப் பகுதியில் இருந்த கதண்டுகள் கடித்தன. இதில் காயமடைந்த அனைவரையும் 108 ஆம்புலன்சில் அழைத்துச் சென்று துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.