பெரியார் அரசுக்கல்லூரியில் மரக்கன்று நடும் விழா: அமைச்சர்கள் பங்கேற்பு
திருச்சி, ஜூலை திருச்சி பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்திற்கு அருகில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மரக்கன்று நடும் விழா இன்று நடைபெற்றது. இதில் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு வைத்து விழாவை தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்வில் மாநகர மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் சவுந்திரபாண்டியன், ஸ்டாலின் குமார், அப்துல் சமத் ஆகியோர் உடனிருந்தனர்.