மணப்பாறை அருகே மகன் கண் முன்னே தந்தை வெட்டிக்கொலை
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள கரும்புளிபட்டியைச் சேர்ந்தவர் குப்புசாமி ( வயது 65). இவரது மகன் மாரிமுத்து (வயது 25). இருவரும் தங்களது பருத்திக்காட்டிற்குச் சென்றுவிட்டு பொத்தமேட்டுப்பட்டிக்கு இருவரும் தனித்தனி இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். கலிங்கப்பட்டி பிரிவு சாலை அருகே செல்லும்போது பின்னால் இருசக்கர வாகனங்களில் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் குப்புசாமியை அரிவாலால் வெட்டியுள்ளார். அதனை தடுக்கச் சென்ற மாரிமுத்துவையும் வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே குப்புசாமி உயிரிழந்தார். இரு கைகள் மற்றும் தலையில் பலத்த காயமடைந்து மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மணப்பாறை போலீசார் விசாரணை. குப்புசாமியின் சகோதரி மகளை அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் காதலித்ததாகலவும் அதில் ஏற்பட்ட முன் விரோததத்தால் கொலை நடந்துள்ளதாகவும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.