திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பணியாளர்கள் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!
பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி பணியாளர்களுக்கு பல்கலைக்கழக நிதியில் இருந்து ஊதியம் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சம்பளம் கேட்டும் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பல்கலை பணியாளருக்கு சம்பளம் போட பல்கலையில் போதிய நிதி இல்லை’ என்று கூறிய நிலையில், உறுப்புக் கல்லூரி ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க துணைவேந்தர் உத்தரவிட்டதை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி, பல்கலைக்கழக நுழைவு வாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.